Monday, May 11, 2020

முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற 
மஸ்ஜித்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய பத்து அம்சத் திட்டங்கள் 

ஆய்வு அறிக்கை  الجامعة العلمية

AALIM RESEARCH INSTITUTE 

ENHANCEMENT  OF ISLAMIC SCIENCE

மௌலானா முனைவர் கலீல் அஹமது முனீரி

அறிமுகம்
முஸ்லிம் சமூகத்தின் சிறப்பு வாய்ந்த சமூக கூடம் மஸ்ஜித்களாகும். முஸ்லிம் சமூகத்தின் இதயமாகவும், உயிரோட்டமாகவும்,அச்சாணியாகவும் திகழும் மஸ்ஜித்கள் நீண்ட கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதோடு முஸ்லிம் சமூகத்தில் மிக முக்கிய செல்வாக்கை செலுத்தக்கூடிய ஸ்தலமாக விளங்குகின்றன.

இன்று முஸ்லிம்கள் சகல துறைகளிலும் பின்னடைவுகளை
எதிர்நோக்கியுள்ளமைக்குப் பிரதான காரணம் அவர்கள் மஸ்ஜித்களை விட்டும் வெகு தூரம்விலகியிருப்பதே. 

எனவே முஸ்லிம் சமூகத்தின் அனைத்து
நடைமுறைகளும் மஸ்ஜித்களை மையப்படுத்தி அமைவதன் மூலமே ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். இதற்கு பொருத்தமானதோர் ஸ்தலம் (இடம்) மஸ்ஜிதாகும்.

முஸ்லிம்கள் சகோதர சமூகத்தோடு சேர்ந்து வாழும் போது பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அவற்றுக்கான சரியான தீர்வினை தருவதும், இஸ்லாம் பற்றிய தவறான புரிதல் மற்றும் கேள்விகளுக்கு
சரியான பதில்கள் வழங்குவதும் முஸ்லிம் சமூகத்தின் கட்டாய கடமையாகும்.

முஸ்லிம் சமூகத்தைப் பீடித்துள்ள வறுமை, கல்வியில் பின்னடைவு.

ஒழுக்கமின்மை, பண்பாட்டு வீழ்ச்சி, அரசியல் தேக்கம், குடும்பங்கள் சீர்குலைவு, ஒற்றுமையின்மை, ஆன்மீக வழிகாட்டுதல் போன்றவற்றுக்கு சரியான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவும் மஸ்ஜித்கள் முன்வர வேண்டும் என பல தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கசக்தி பெற்றுள்ள ஒரேயொறு நிறுவனம் மஸ்ஜித் மட்டுமே. 

இதனால்தான்அவற்றை செவ்வனே நிறைவேற்ற மஸ்ஜித்கள் சமூக கட்டமைப்பில்எவ்வாறான பங்களிப்புகளை ஆற்ற வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள்செய்து ஆய்வு புத்தகமாக வெளியிட முயற்சித்துள்ளோம்.
அல்ஹம்துலில்லாஹ்......



1.அனைவருக்கும் குர்ஆன்

2.வறுமை ஒழிப்பு

3.ஆரோக்கியமான சமூகம்

4.தரமான கல்வி

5.குடும்ப நிர்வாக மேம்பாடு

6.பெண்கள் மேம்பாடு

7 சுத்தம் சுகாதாரம்

8 பொருளாதார வளர்ச்சி

9.சமூக கட்டமைப்பு

10.நாட்டுப்பற்று




அனைவருக்கும் குர்ஆன்



ஒவ்வொரு மஹல்லாவும் தங்கள் பகுதி (அனைத்து மக்களையும்) குழந்தைகள், பெண்கள், வாலிபர்கள், வியாபாரிகள், பெரியவர்கள் என்று அனைத்து மக்களையும் குர்ஆனை பார்த்து தர்தீபோடு ஓத செய்ய முழுமையாக முயற்சி செய்ய வேண்டும்.

இன்றைய நிலையில் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் (190 கோடி) யில் வெறும் 4 சதவிகிதம் முஸ்லிம்கள் மட்டுமே குர்ஆனை பார்த்து தர்தீபோடு (உச்சரிப்பு சரியாக) ஓத தெரிந்த மக்களாக இருக்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் 10 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு மஹல்லாவும் திட்டமிட்டு அனைவரையும் குர்ஆன் ஓத செய்ய வேண்டும்.

வருங்கால குழந்தைகளை 7 வயதிற்குள் குர்ஆனை ஓதக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும்.

Ref: Tujise Journal of Islamic Economics.



வறுமை ஒழிப்பு






ஒவ்வொரு மஹல்லாவும் தங்கள் மஹல்லாவில் (BPL) வறுமைக்
கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களை வறுமையிலிருந்து
மீட்டெடுக்க வேண்டும்.

அடுத்த பத்தாண்டுகளில் வறுமையில்லா முஸ்லிம் சமூகத்தை

உருவாக்க மஹல்லாக்கள் திட்டமிட்ட செயல்பட வேண்டும்.

நான்கு பிச்சைகாரர்களில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) மக்கள் 29.5
சதவிகிதம் முதல் 35.4 சதவிகிதம். இதில் முஸ்லிம்களின் நிலை 8.6 சதவிகிதம்
முதல் 12.4 சதவிகிதம்

100 முஸ்லிம்களில் 32 நபர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளார்கள்.

குறிப்பு:

ஒவ்வொரு மஹல்லாவிலும் சராசரியாக 15 சதவிகிதம் முதல் 20
சதவிகிதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கலாம்.

Ref: Suresh Tendulkar Committee
Abhijit V.Banerjee
(Poor Economics)
Rangarajan committee



ஆரோக்கியமான சமூகம்




ஒவ்வொரு மஹல்லாவும் தங்கள் மஹல்லா மக்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

முஸ்லிம்களின் உணவு முறைகளுக்கும் அவர்களின் உடல்

மேம்பாட்டிற்கும் அதிக வேறுபாடுகள் இருக்கிறது. அதனால் தான்

முஸ்லிம்கள் அதிகமாக மருத்துவமனைகளை நாடுகின்றார்கள்.

எந்த சமூகம் தன் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் தரவில்லையோ அந்த சமூகம் எவ்வளவு அறிவு, ஆற்றல் பெற்றிருந்தாலும் அந்த சமூகத்தால் வெற்றி பெற முடியாது.

அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் கேள்வி குறியாக உள்ளது.

மருத்துவமனைகளில் அதிகமாக நோயாளிகளாக சேர்க்கப்படுவது சர்க்கரை, ஹார்ட் அட்டாக், பெண்களுக்கான நோய்கள் போன்ற) முஸ்லிம்கள் அதிகமாக உள்ளார்கள்.

குறிப்பு:

100 முஸ்லிம்களின் 36 முஸ்லிம்கள் இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Ref: shama Firdaush, Department of Economics

vidyasagar university W.B, India Health Status of Muslms in India



தரமான கல்வி






ஒவ்வொரு மஹல்லாவும் தங்கள் மஹல்லா மக்களின் கல்வி தகுதியை உயர்த்த / தொடர்ந்து விழிப்புணர்வு தருவதற்கு கல்வி குழுவை உருவாக்க வேண்டும். இந்த கல்வி குழு தன் மஹல்லா மாணவர்களின் கல்வி நிலை மற்றும்

இடைநிற்றல் மாணவர்கள். தகுதி வாய்ந்த திறமையான மாணவர்கள்

போன்றவர்களை கண்டறிந்து உதவிகள் மற்றும் வழிகாட்டல் செய்ய வேண்டும்.

இந்தியாவில் முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலை SC & ST மக்களை விட மிக

பின்தங்கியுள்ளது.

மஹல்லாக்கள் அனைத்தும் 100 சதவிகிதம் மாணவர்களை 12 வரை

பள்ளிகளுக்கு போவதை உறுதிச் செய்ய வேண்டும்.

உயர் கல்வியில் நமது விகிதாசாரம் இந்திய அளவில் 17.3 சதவிகிதம் இதை பத்து ஆண்டுகளுக்குள் 50 சதவிகிதமாக மாற்ற வேண்டும்.

. 10 மஹல்லாக்கள் இணைந்து பயிற்சி மையங்கள் உருவாக்க வேண்டும்

ஒரு மஹல்லாவில் 100 மாணவர்கள் இருந்தால்

20% மாணவர்களை அரசு பணியாளர்களாக உருவாக்க வேண்டும். 20% மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்ப அறிஞர்களாக உருவாக்க .

வேண்டும். 40% மாணவர்கள் வாழ்வியல் மேம்பாட்டு ஆளுமைகளாக உருவாக்க

வேண்டும் 20% வியாபார மேம்பாட்டு ஆளுமைகளாக உருவாக்க வேண்டும். .

Ref: Sachar committee Gundu committee முஸ்லிம்கள் 2020 - 2030




குடும்ப நிர்வாக மேம்பாடு





ஒவ்வொரு மஹல்லாக்களும் தங்கள் பகுதி மக்களுக்காக குடும்ப நிர்வாக மேம்பாட்டு பயிற்சிகளை தொடர்ந்து கொடுக்க வேண்டும். இன்றைய இஸ்லாமிய குடும்பங்கள் கலாச்சார மாற்றங்களால்

இஸ்லாத்தின் அடிப்படை அடையாளங்கள் இழந்து பல குடும்பங்கள் மிக

மோசமான நிலையில் இருக்கிறார்கள். இன்றைய குடும்பங்களின் சீர்கேட்டிற்கு

ஈமானின் பற்றாகுறைதான் காரணம். ஈமானிய அடிப்படையில் குடும்பங்களை

உருவாக்க வேண்டும்.

. கணவன் மனைவி உறவு முறைகளை பலப்படுத்த வேண்டும்

. பெற்றோர்களை கண்ணியமாக நடத்த செய்ய வேண்டும்

குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க செய்ய வேண்டும்

உறவுகளை பேணி அவர்களுக்கு உதவி செய்ய வைக்க வேண்டும்.

. ஏழை, எளிய மக்களை பாதுகாக்க செய்ய வேண்டும்

தத்தெடுப்பு என்பது கல்விக்கு உதவி, மருத்துவ உதவி, முதியவர்களுக்கு உதவி,

குறிப்பு:

வறுமை ஒழிப்பு திட்டத்தில் குடும்பங்களின் பங்களிப்பு மிகவும் அதிகம்.

ஒரு நடுத்தர குடும்பம் ஒரு ஏழை உறவினர் குடும்பத்தை தத்தெடுக்க வேண்டும்

ஒரு வசதி படைத்த குடும்பம் 3 ஏழை உறவினர்கள் குடும்பத்தை தத்தெடுக்க

வேண்டும்.

Ref: முஸ்லிம்கள் 2020 - 2030



பெண்கள் மேம்பாடு




ஒவ்வொரு மஹல்லாக்களும் பெண்களின் வளர்ச்சியில் அதிக
முக்கியத்துவம் தர வேண்டும். எந்த சமூகம் பெண்களை சிந்தனைவாதிகளாக
உருவாக்குகிறதோ அந்த சமூகம் தோற்றதாக வரலாறு கிடையாது.

.மஹல்லா அனைத்திலும் பெண்கள் மதரஸா ஆரம்பித்தல்

குடும்ப மேம்பாடு பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
வீட்டு பொருளாதார மேம்பாட்டு முறையை கற்றுக் கொடுத்தல்

.பெண்கள் மனித வளத்தை ஆக்கபூர்வமாக உருவாக்குதல்

பெண்கள் குர்ஆன், ஹதீஸ் இல்முகளோடு மூன்று துறைகளில்
பெண்களை உருவாக்குதல்

1.தாய் சேய் நல மருத்துவர் அல்லது செவிலியராக உருவாக்குதல்

2. ஆசிரியராக ஆலிமாவாக உருவாக்குதல்
3.உளவியல் நிபுணராக (மனநல ஆலோசகராக) உருவாக்குதல்

Ref: முஸ்லிம்கள் 2020-2030



சுத்தம் சுகாதாரம்





ஒவ்வொரு மஹல்லாவும் தங்கள் பகுதி மஹல்லாக்களை சுத்தமானதாகவும், இயற்கை பாதுகாப்புள்ளதாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

.மஹல்லாக்கள் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது வருடத்திற்கு 100
மரங்கள் நடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
. மஹல்லாவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை உருவாக்க வேண்டும்.
. மஹல்லாக்களின் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கழிவு நீர் ஓடைகளை சுத்தமானதாகவும் மழை நீர் சரியாக செல்லும் படியும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
• மஹல்லாக்கள் தங்கள் பகுதிகளை மக்கும் குப்பை / மக்கா குப்பை என பிரித்து செயல்படும் பகுதிகளாக உருவாக்க வேண்டும்.

3R formula வை பின்பற்றவும்

Reduse - Reuse -Recycle சிக்கனம் - மறுபயன்பாடு - மறுசுழற்சி

குறிப்பு:

இதே மஹல்லாக்களும் நடைமுறைக்கு கொண்டு வருவதோடு தங்கள் பகுதி மஹல்லா வாசிகளின் வீடுகளுக்கு அவசியம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.



பொருளாதார வளர்ச்சி





ஒவ்வொரு மஹல்லாவும் ஒரு பொருளாதார மேம்பாட்டு குழுவை உருவாக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது இரண்டு விஷயங்களை கொண்டு தான் உள்ளது.

1.சுய தொழில் மேம்பாடு

2.வேலைவாய்ப்பு மேம்பாடு

இந்தியாவின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் மிக பெரிய பங்களிப்பு சுய தொழில் மேம்பாட்டைக் கொண்டு தான் இருந்தது. ஆனால் இந்த நிலை சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் நலிவடைந்து வருகிறது.

இந்தியா சுதந்திரம் வாங்கும் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு 28 சதவிகிதம். ஆனால் தற்போது 2019 ல் 3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் 64 துறைகளில் சிறந்து விளங்கியவர்கள். இன்று அது 4 துறைகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
. எனவே மஸ்ஜித்கள் தம் மஹல்லா மக்களை நன்கு உழைப்பவர்களாகவும், ஹலாலான வியாபாரங்கள் மட்டுமே செய்யக்கூடியர்களாக உருவாக்க வேண்டும்.

மூத்த வியாபாரிகள் வைத்து இளம் வியாபாரிகளை உருவாக்க வேண்டும்

. கூட்டு பொருளாதார கொள்கை உருவாக்க வேண்டும்.

. மஹல்லா வியாபாரிகளுக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

Ref: Frontline - 2019



சமூக கட்டமைப்பு





ஒவ்வொரு மஹல்லாவும் சமூக கட்டமைப்பு திட்டமிட்டு உருவாக்க வேண்டும்.

சமூக கட்டமைப்பு நான்கு விஷயங்களை கொண்டு உருவாக்க வேண்டும்.

1. மஹல்லா மேம்பாடு - ஒவ்வொரு மஹல்லாவும் தன் பகுதி மஹல்லா

மக்களின் வாழ்வாதார நிலை, கல்வி நிலை, பொருளாதார கல்வி, ஆரோக்கிய

நிலையை அவசியம் தரவுகளாக வைத்திருக்க வேண்டும்.

2.சமூக நல்லிணக்கம் - மஹல்லாக்கள் தங்களைச் சுற்றியுள்ள மாற்றுமத சகோதர மக்களோடு நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை பேணி பாதுகாக்க வேண்டும்.

3. ஊரக வளர்ச்சி - ஒரு மஹல்லா மற்ற மஹல்லாக்களோடு இணைந்து தன் சார்ந்த பகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

மஹல்லாக்களுக்குள் இணைப்பை ஏற்படுத்தி மேம்பட வேண்டும். (உதா ஒன்றிணைந்து நூலகம், பயிற்சி மையம், பள்ளிக்கூடம், கல்லூரிகள் உருவாக்க முயற்சித்தல்)

4.ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வளர்ச்சி

ஒவ்வொரு மஹல்லாவும் திட்டமிட்டு இந்த குழுவை உருவாக்க வேண்டும். நம்மை போல யாரெல்லாம் சமூக பணி செய்கிறார்களோ அவர்களோடு நாம் இணைந்து கொள்ள வேண்டும். அரசு பணியாளர்களிடம் சுமூக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்களோடு மாதம் ஒரு முறை கலந்து ஆலோசிக்க வேண்டும்.


Ref: முஸ்லிம்கள் 2020-2030




நாட்டு பற்று






ஒவ்வொரு மஹல்லாக்களும் நமது வருங்கால சந்ததிகளுக்கு நாட்டிற்காக நமது முன்னோர்களின் தியாகத்தையும், பங்களிப்பையும் விளக்கி வரலாறுகளை அறிய செய்ய வேண்டும்

தேசப்பற்று இல்லாதவர்களெல்லாம் நாட்டை ஆட்சிசெய்யும் போது இந்திய நாட்டிற்காக தன் உடல், பொருள், உயிர் என்று அனைத்தையும் தியாகம் செய்தவர்களின் வாரிசுகள் நாம் இன்று எல்லா நிலையிலும் பின் தங்கி

போனதின் காரணம் என்ன?

இந்த நிலை மாற வேண்டுமென்றால் நாம் மாற வேண்டும். திட்டமிட்டு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் முஸ்லிம் சமுதாய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அந்த எழுச்சி நாட்டின் வளர்ச்சி, நாட்டின் மேம்பாடு நாட்டின் உருவாக்கம் என்ற கோணத்தில் இருக்க வேண்டும்.

'முழுமையான மக்களின் விழிப்புணர்வு மற்றும் எழுச்சியால் மட்டுமே சமுதாயத்தையும், நாட்டையும் மேம்படுத்த முடியும்.'

'மாற்றம் என்பது அது மாறுவது கொண்டும் மாற்றுவது கொண்டும் தான் ஏற்படும் அது தானாக ஏற்படாது.'


No comments:

Post a Comment