தாகத்தை அகற்ற
அல்லாஹ்வுக்காக உதவுங்கள்
தண்ணீர் அல்லாஹ்வின் ஓர்
உன்னத அருட்கொடை.
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
சதகத்துல் ஜாரிய எனும் தர்மம்
சதகத்துல் ஜாரிய என்பது ஒரு மனிதனுடைய ஜீவிய காலத்திலும், அவர் இறந்து விட்டபிறகும் நன்மைகளை வழங்கி கொண்டே இருக்கும் சில தர்மங்களைச் சார்ந்த காரியங்களாகும் அவைகளை பொது மக்களுக்கு பயன்படக்கூடிய இறையில்லம், மதரஸா , கல்விக்கூடம், மருத்துவமனை, தண்ணீர் விநியோகம் போன்றவைகளுக்கு வாரி வழங்குதல் அல்லது தாமே நிறுவி பொதுமக்களின் உபயோகத்துக்கு தர்மம் [வக்பு] செய்து விடுவதாகும்.
இறந்த விட்ட உங்கள் தாய் தந்தையருக்கு ஸதகதுல் ஜாரியா என்ற தர்மம் செய்யுங்கள் மறுமையயின் வாழ்விற்காக.மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
ஒருவர் இறந்தபின் அவரை தொடர்ந்து மூன்று விஷயங்கள் மட்டும் நன்மைகள்
வந்துகொண்டே இருக்கும் . அதில் ஒன்றுதான் இந்த சதகத்துல் ஜாரிய எனும்
தர்மம் ஆகும் . இந்த விடயத்தை நம் மனதில் ஆழமாக பதியவைத்துக் கொள்ள
வேண்டும் . நம் வாழ்வின் காலங்களில் சில சதகத்துல் ஜாரிய எனும் தர்மம்
அவசியம் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் . நல்ல ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்க
வேண்டும், கல்வி பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலும் , எத்தி
வைப்பதிலும் நாம் அவசியம் செய்ய வேண்டும்.
இதற்கோர் முன்மாதரியாக உஸ்மான் [ரலி] அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த ஓர்
அற்புதாமான நிகழ்ச்சியை கூறலாம். அவர்களுடைய காலத்தில் ஒரு சமயத்தில்
கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஒரு யூதருக்குச் சொந்தமான ஒரு
கிணறு மட்டும் வற்றாமல் நீரூற்று சுரந்து கொண்டே இருந்தது. அவன்
சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு தண்ணீரை நல்ல விலைக்கு
விற்றுக்கொண்டிருந்தான்.
அப்போது உஸ்மான் [ரலி] அவர்கள் அந்த யூதநிடத்தில் அந்த கிணற்றை விலைக்கு
கொடுக்கும்படி கேட்டார்கள். அவன் தர மறுத்து விட்டான் , உஸ்மான் [ரலி]
அவர்கள் அதோடு விட்டுவிடவில்லை மீண்டும் அவனிடம் சென்று , அன்பரே! ஒரு
பகுதியையாவது விலைக்கு கொடு , மறு பகுதியை நீ வைத்துக்கொள் ஆளுக்கொருநாள்
வீதம் முறை வைத்து பயன் படுத்திக்கொள்ளலாம் . உன்னுடைய முறை அன்று நீ என்ன
விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக்கோள் என்று யோசனையை கூறினார்கள்.
யூதனும் சற்று யோசித்து விட்டு , ஆகா இது நல்ல யோசனையாகவல்லவா தெரிகிறது .
இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடக்கூடாது நல்ல விலைக்கு விற்று பெரும் பணத்தை
பெற்று விடலாம், அதோடு தமது முறையன்று தண்ணீரை விற்றும் பணம்
சம்பாதிக்கலாம். ஆக இருவகையில் தமக்கு பெரும் பணம் கிடைத்து விடும் என்ற
பேராசையில் விற்றுவிட சம்மதித்தான்.
இறந்த விட்ட உங்கள் தாய் தந்தையருக்கு ஸதகதுல் ஜாரியா என்ற தர்மம் செய்யுங்கள் மறுமையயின் வாழ்விற்காக.
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
உஸ்மான் [ரலி] அவர்கள் இக்கிணற்றின் ஒரு பகுதியை வாங்கி மக்களுக்கு தர்மம் செய்து விட்டார்கள் . மக்களும் மன மகிழ்வோடு தண்ணீரை எடுத்துச்சென்றனர் . நாளா வட்டத்தில் நிலைமை வேறு விதமாக மாறிவிட்டது. அதாவது தமது முறையன்று தண்ணீரை எடுப்பவர்கள் மறுநாளைக்கும் தேவையான தண்ணீரை சேர்த்து எடுத்து செல்லலாயினர் .
திடீர் மரணத்தில் இருந்து பாதுகாப்புபெற?ஆபத்தில் இருந்து பாதுகாப்புபெற? எந்தவகை தர்மம் செய்ய வேண்டும்மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
அதன் பிறகு யூதனுடைய வியாபாரம் படுத்துவிட்டது. பணமா கொடுத்து வாங்குவோர்
யாருமில்லை . இத்தகைய நிலையை சற்றும் எதிர்பாராத யூதன் வேறு வழியின்றி
தம்மிடமிருந்த மற்றொரு பகுதி கிணற்றையும் உஸ்மான் [ரலி] அவர்களிடமே விற்று
விட்டான் அவர்கள் அதனையும் வாங்கி பொது மக்களின் உபயோகத்திற்கு தர்மமாக
கொடுத்து விட்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக
இருக்கின்றன.
இந்த அடிப்படையிலே தான் முன்னோர்கள் பொது மக்களின் தேவைக்காக ,
வழிப்போக்கர்களின் தேவைக்காக, சிற்சில இடங்களில் தண்ணீரை தேக்கிவைத்து
விநியோகித்து வந்தார்கள். இன்னும்சில இடங்களில் தலைசுமையை தானாகாவே இறக்கி
வைக்கவும் பிறகு தாமாகவே தூக்கி தலையில் வைத்துக்கொள்ளவும் வசதியாக
சுமைதாங்கி என்ற பெயரில் உயரமான ஓர் இடத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்
இன்னும் சிலர் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வைத்து
வளர்த்திருந்தார்கள் . மேலும் பொது மக்களுக்குத் தேவையான பல நல்ல
காரியங்களையும் செய்து வந்தார்கள். இத்தகைய காட்சிகளை இன்றும் கூட
கிராமங்களில் காணலாம். இப்படிப்பட்ட காரியங்கள்தான் சதகத்துல் ஜாரிய எனும்
தர்மமாகும்.
திடீர் மரணத்தில் இருந்து பாதுகாப்புபெற?
ஆபத்தில் இருந்து பாதுகாப்புபெற?
எந்தவகை தர்மம் செய்ய வேண்டும்
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
எது தர்மம்
தர்மம் என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் . இருப்பினும் எது உண்மையான தர்மம் , எதை தர்மம் செய்தால் முழுமையான நன்மை
கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
இதைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் ..
''நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதிலிருந்து [அல்லாஹ்வுக்காக] நீங்கள்
செலவு செய்யாத வரை நன்மையை பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்.. எந்த பொருளை
[அவ்வாறு] நீங்கள் செலவு செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை முற்றிலும்
அறிந்தவனாக இருக்கிறான்'' என்று கூறுகிறான்.
அல்குர் ஆன் .. 3-92]
இந்த வசனம் அருளப்பட்ட போது நபி [ஸல்] அவர்களுடன் இருந்த அவர்களின் நண்பர்
அபூதல்ஹா [ரலி] அவர்கள் இறைதூதர் அவர்களே! என்னுடைய சொத்துக்களில் எனக்கு
மிகவும் பிரியமானது என்னுடைய பைரஹா எனும் தோட்டமாகும் அல்லாஹ்வின்
பொருத்தத்தை பெறுவதற்காக அதனை தர்மம் செய்து விட விரும்புகிறேன் என்று
கூறுகிறார்கள்.
நண்பரின் நன்நோக்கத்தை புரிந்துகொண்ட நபி [ஸல்] அவர் நண்பரே! அந்த தோட்டம்
நல்ல பலன் தரக்கூடிய தோட்டமாக இருக்கிறது. எனவே அதனை உங்களுடைய
உறவினர்களில் இருக்கக்கூடிய ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுப்பது நலமாகத்
தெரிகிறது . என யோசனைக் கூறினார்கள் நண்பரும் அவ்வாறே செய்து முடித்தார்.
இதைப்போன்ற எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் குவிந்து கிடக்கின்றன.
மேற்கூறப்பட்ட இறை வசனத்தையும் அந்த நிகழ்ச்சியையும் நன்கு சிந்தித்துப்
பாருங்கள்! தர்மம் என்பது , நமக்குப்பயன் படாத பொருட்கள் மிச்சம் மீதி
இருக்கும் உணவுப்பொருட்கள், உபயோகமற்ற ஆடைகள் , தேவையின்றி ஒதுக்கி
வைக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கொடுப்பது உண்மையான தர்மம் அல்ல
என்பதையும், நாம் எதை உண்ண உடுத்த உபயோகிக்க விரும்புகிறோமோ அவற்றையோ
அல்லது அவற்றில் சிலதையோ கொடுப்பது தான் உண்மையான தர்மம் என்பதையும் மிக
அழகான முறையில் விளக்கிக்காட்டுகின்றன.
அல்லாஹ் மிக அறிந்தவன் .
தானத்தில் சிறந்த தானம்
தானத்தின் வகைகள் பல உண்டு.
அன்னதானம், பொருள் தானம், பணம் தானம், கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு
தானம் போன்றவற்றில் ‘நீர் தானமும்’ சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
இத்தகைய தானங்களில் இஸ்லாம் தேர்ந்தெடுத்த சிறந்த தானமாக ‘நீர்தானம்’ திகழ்கிறது. இது குறித்த நபிமொழிகள் வருமாறு:
ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார்
இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன்.
‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது
எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர்
புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்” (நூல்: அஹ்மது நஸயீ-3666)
“ஹள்ரத் ஸஃதுபின் உப்பாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின்
தூதர் அவர்களே! எனது தாயார் தர்மம் செய்வதை பிரியப்படுவார். எனவே, நான்
அவர்களின் சார்பாக தர்மம் செய்தால் அது அவருக்கு பயனளிக்குமா?’ என
கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் பயன் தரும், தண்ணீரை தர்மம்
செய்வதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்”.
தண்ணீர் சிறந்த தானமாக தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன? ஏன்? எதற்கு?
என ஆய்வு செய்யும்போது நீரில்லாமல் உலகம் இயங்க முடியாது. இந்த கூற்று
உண்மையானது!
“உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம்” (21:30) என்பது திருமறையின் கூற்றாகும்.
நீரில்லாமல் உயிர்கள் இல்லை, நீரில்லாமல் உலகம் இல்லை. நீரை நம்பித்தான் உயிரும், உலகமும் உருவாக் கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் அடிப்படையானது நீர் ஆதாரம். இது மனித இனத்திற்கு
மட்டும் முக்கியமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது. மரம்,
செடி, கொடி, தாவரம், வனவிலங்கு, வீட்டு வளர்ப்புப் பிராணி, கால்நடை, ஊர்வன,
பறப்பன, நடப்பன, மிதப்பன போன்ற அனைத்து உயிரினங்களில் ஆரம்பித்து மனித
கண்களுக்கு புலப்படாத ‘ஜின் இனம்’ வரைக்கும் உயிர் வாழ நீர் ஆதாரம்
அவசியம்.
“ஒருவர் ஒரு கிணற்றை தோண்டுகிறார். அதிலிருந்து ஜின் இனம், மனித இனம், பறவை
இனம் போன்ற உயிரினம் நீர் அருந்துவதால் அவருக்கு மறுமை நாளில் இறைவன் கூலி
கொடுக்காமல் இருப்பதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:
புகாரி)
மரணத்திற்கு பிறகும் நன்மை தரும் நீர் தானம்
“ஒரு இறைவிசுவாசி மரணித்த பிறகும் அவரை வந்து அடையக்கூடிய நற்செயல்களில் முக்கியமானவை:
1. கல்வி: அதை அவர் கற்றுக்கொடுத்து பரப்பவும் செய்கிறார்.
2. நல்ல குழந்தையை அவர் விட்டுச் சென்றிருக்கிறார்.
3) ஒரு புத்தகத்தை அவர் வாரிசு பொருளாக விட்டுச் சென்றிருக்கிறார்.
4) ஒரு பள்ளிவாசலை அவர் கட்டியுள்ளார்.
5) வழிப்போக்கருக்காக ஒரு தங்குமிடத்தைக் கட்டியுள்ளார்.
6) ஓடக்கூடிய ஒரு நீர் நிலையை உருவாக்கி இருக்கிறார்.
7) தமது செல்வத்திலிருந்து, ஆரோக்கியமாக வாழும் போது தர்மம் செய்திருக்கிறார்.
இவை அனைத்தும் அவரின் மரணத்திற்கு பிறகும் அவரை வந்தடையும் நன்மை பயக்கும்
நற்செயல்களாக திகழ்கின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:
இப்னுமாஜா)
ஒருவர் தமது மரணத்திற்கு பின்பும் தமக்கு நன்மை வந்து அடைய வேண்டும் என
நினைத்தால், அதிகமாக நீர் தானங்களை நிறைவேற்றுவதுடன், நிரந்தரமான நீர்
தேக்கங்களையோ அல்லது நீர் தொட்டிகளையோ அல்லது நீர் நிலைகளையோ ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும்.
வாயில்லாத ஜீவனும், நீர் தானமும்
“ஒரு மனிதர் பாதையில் கடந்து செல்லும்போது அவருக்கு கடுமையான தாகம்
ஏற்பட்டது. அருகிலுள்ள ஒரு கிணற்றில் இறங்கி அதன் நீரை பருகி மேலே
வரும்போது ஒரு நாய் தாகத்தால் ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதை காணுகிறார்.
தமக்கு ஏற்பட்ட தாகத்தை போன்று நாய்க்கும் ஏற்பட்டிருப்பதாக தனக்குள்
பேசிக்கொள்கிறார். பிறகு கிணற்றில் இறங்கி தமது காலணியை கிணற்றில் முக்கி
தண்ணீரை நிரப்பி காலணியை தமது வாயால் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்து
நாய்க்கு நீர் புகட்டுகிறார். இதனைக் கண்ட இறைவன் அவரை நன்றி பாராட்டி
அவரின் பாவத்தை மன்னித்தான்.
இதைக்கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே, உயிரினங்கள்
மீது கருணை காட்டுவதாலுமா நற்கூலி கிடைக்கும்?’ என வினவினார்கள். ‘ஆம்,
ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதாலும் நற்கூலி கிடைக்கும்’ என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி)
அவர்கள் (புகாரி-2363; முஸ்லிம்- 2244)
வாயில்லாத ஜீவனுக்கு நீர் புகட்டுவதால் இறைவனே மனமுவந்து பாராட்டி பாவத்தை
மன்னிக்கும்போது மனிதன் சக மனிதனுக்கு நீர் புகட்டுவதால் எவ்வளவு நன்மை
கிடைக்கும்? இறைவன் அதைவிட எந்தளவு பாராட்டுவான்? என்பதை கொஞ்சம்
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் ஹள்ரத் ஹாகிம் (ரஹ்) அவர் களின் முகத்தில் ஒரு
காயம் இருந்தது. அது ஏறக்குறைய ஒரு ஆண்டு காலமாக இருந்தது. “உங்களின்
நோய்க்கு தர்மத்தைக் கொண்டு சிகிச்சை பெறுங்கள்” என்ற நபிமொழியை அவர்கள்
கேள்விப்படுகிறார்கள்.
தர்மத்தில் சிறந்தது நீர் தர்மம். எனவே, இமாம் ஹள்ரத் ஹாகிம் (ரஹ்)
முஸ்லிம்களின் வீடுகளின் வாசலுக்கு முன் நீர் தொட்டியை அமைத்து
கொடுத்தார்கள். அதிலிருந்து மக்களும், அங்கு வந்து செல்வோரும் நீரைப்
பருகினார்கள். இந்த செயலால் அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நிவாரணம்
கிடைத்தது.
ஒரு மனிதர், ஹள்ரத் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் வந்து, “எனது
முட்டுக்காலில் ஒரு காயம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் பல
மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து ஆலோசனைகளை கேட்டு, மருந்திட்டு
வந்தேன். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகியும் அது குணமாகவில்லை” என்றார்.
அதற்கு ஹள்ரத் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அவரைப் பார்த்து “நீங்கள்
மக்களுக்கு நீர் தேவைப்படும் இடத்தில் ஒரு கிணற்றை ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு ஏற்பாடு செய்தால் உனது மூட்டுவலி குணமாகும்” என்றார்கள். அவரும்
அவ்வாறே செய்தார். அவரின் மூட்டுவலியும் குணமாகியது (பைஹகீ).
தர்மம் செய்வதினால் நன்மை கிடைக்கும். எனினும் தண்ணீரை தர்மம் செய்தால்
நன்மைகள் மட்டுமல்ல. நமது உடலில் உள்ள பிணியும் அதனால் நீங்கி விடுகிறது.
தண்ணீரை விட மிகச் சிறந்த தர்மம் ஏதுமில்லை. ‘தமக்கு போக மீதமுள்ள தண்ணீரை
பிறருக்கு வழங்கிட வேண்டும்’ என இஸ்லாம் கூறுகிறது. தண்ணீர் அல்லாஹ்வின்
அருட்கொடை. அது மக்களின் பொது சொத்து. அது ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ ஒரு
குறிப்பிட்ட இனத்துக்கோ சொந்தமானதல்ல.
ஒருவரின் தேவைக்கேற்ப நீரை பயன்படுத்திக் கொள்ளலாம். அனாவசியமாக அதை வீண்
விரயம் செய்யக் கூடாது. தேவைக்கு மிஞ்சியதை தண்ணீரின்றி அவதிப் படும்
மக்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். இதுதான் இஸ்லாம் கூறும் இறுதியான
உறுதியான தீர்வு.
மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி,
பாட்டப்பத்து, நெல்லை டவுன்.
மனிதர்களுக்கு எவ்வளவு அழகான செய்தி!

9,500 அனாதைகளுக்கு ஆதரவு
95,000 மாணவர்களுக்கு நிதி உதவி
5,700 மசூதிகள்
200 பெண்களுக்கு பயிற்சி மையங்கள்
860 பள்ளிகள்
4 பல்கலைக்கழகங்கள்
102 இஸ்லாமிய மையங்கள்
9,500 கிணறுகள்
51 மில்லியன் குர்ஆன்கள் விநியோகிக்கப்பட்டன
7 மில்லியன் மக்கள் ,பாதிரியார்கள் மற்றும் ஆயர்கள் அவரது முயற்சியில் இஸ்லாத்திற்கு திரும்பினர்.
தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
https://waterproject313.blogspot.com/
மனிதர்களுக்கு எவ்வளவு அழகான செய்தி!

டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் சுமைத்
ஒரு மனிதன் வாழ்ந்தால் இவரைப்போல் வாழ வேண்டும்
நம் கப்ருக்கு நாம் செய்த முதலீடு என்ன?...
இவர்தான் உண்மையான செல்வந்தர்..
நம் கப்ருக்கு நாம் செய்த முதலீடு என்ன?...
இவர்தான் உண்மையான செல்வந்தர்..
ஆப்பிரிக்காவில் அவர் வாழ்ந்த காலத்திலிருந்து அவர் செய்த சேவைகளின் சிறப்பம்சங்கள்:
9,500 அனாதைகளுக்கு ஆதரவு
95,000 மாணவர்களுக்கு நிதி உதவி
5,700 மசூதிகள்
200 பெண்களுக்கு பயிற்சி மையங்கள்
860 பள்ளிகள்
4 பல்கலைக்கழகங்கள்
102 இஸ்லாமிய மையங்கள்
9,500 கிணறுகள்
51 மில்லியன் குர்ஆன்கள் விநியோகிக்கப்பட்டன
7 மில்லியன் மக்கள் ,பாதிரியார்கள் மற்றும் ஆயர்கள் அவரது முயற்சியில் இஸ்லாத்திற்கு திரும்பினர்.
இந்த நன்மையை நீங்களும் பெற ஆர்வமாக இருப்பீர்களேயானால்,
இது
போன்ற வறட்சியான பல கிராமங்களில் குடிநீர் கை அடி பம்ப் (இறைப்பான்)
மற்றும் ஆழ குழாய்கள் அமைக்க வேண்டி உங்களின் பங்களிப்பை தாராளமாக வழங்க.
தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்-ஃபதஹ் டிரஸ்ட்
தொடர்புக்கு:
ஜனாப்.அய்யூப் 90940 04414
என்ற எண்ணில் அணுகவும்.
DRINKING WATER AND ABULATION
PROJECT NO .313/01/2020-1442
VILLAGE NEEMLA BASS TEHSIL PAHARI
DISTRICT BHARATPUR RAJ (MEWAT)
WAKF BY MARHOOM ABDUL RAHEEM KUMBAKKONAM






















































































No comments:
Post a Comment